உள்ளூர் செய்திகள்

தேசிய அளவில் சிலம்பாட்டம்

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் உள்ள டி.டி.ஏ., லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி, தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடந்தது.டி.டி.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஜமுனா பாய் தலைமை வகித்தார். டி.டி.ஏ., பி.எட்., கல்லூரி முதல்வர் குருசாமி முன்னிலை வகித்தார். டி.டி.ஏ., லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி முதல்வர் அந்தோணி பர்ணபாஸ் வரவேற்றார்.போட்டியில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது சிலம்பாட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் நிறைவாக சதுர்வேதி சேரன்மாதேவி மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்பம் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்