மாணவர்களுக்கு சான்று வழங்கல்
சிவகங்கை: வனம், வன உயிரினங்களின் பாதுகாப்பு, சவாலுக்கான தீர்வு குறித்த பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் விழா சிவகங்கையில் நடந்தது.சிவகங்கை மாவட்ட வனத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து மாவட்ட அளவில் 50 பள்ளிகளில் இருந்து 500 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு சாவல், தீர்வுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாவட்ட வன அலுவலர் ஆர்., மகேந்திரன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கினார். உதவி வனப்பாதுகாவலர் மலர்கண்டன் வரவேற்றார். மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் சிறப்பு வகித்தார்.வனச்சரகர்கள் கார்த்திகேயன், பார்த்திபன், சுப்புராஜ், ஜெயசீலன், செந்தில்குமார் உட்பட வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். வனச்சரக அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.