உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் விழா

வேடசந்தூர்: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஊராட்சியில் புதிதாக பிறந்த குழந்தைகளின் தாயாரை தேடிச்சென்று அவர்களிடம் மரக்கன்று கொடுத்து உங்கள் குழந்தையை போல் மரக்கன்றையும் வளர்த்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.மரக்கன்றுகள் நட்டு பணியை துவக்கினர். ஏற்பாடுகளை பள்ளி சாரண, சாரணியர் இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை செய்தார். மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்