முன்னாள் மாணவர் சந்திப்பு
ராசிபுரம்: ராசிபுரம், குருசாமிபாளையத்தில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 1989 - 91 ஆண்டுகளில் மேல்நிலைக் கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 35 ஆண்டுகளுக்கு பின், நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், மருத்துவ நிபுணர்களாகவும், தலைச்சிறந்த பொறியாளர்களாகவும், கல்லுாரி பேராசிரியர்களாகவும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் மற்றும் தொழில் முனைவோர்களாகவும் உயர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும், நேற்று நீண்ட இடைவெளிக்கு பின், தங்களது பழைய பள்ளிக்கு நேரில் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளிக்கால நினைவுகளை, தாங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் தங்களது பழைய ஆசிரியர்களை பாராட்டி, அவர்களுக்கு பரிசு வழங்கி காலில் விழுந்து ஆசிகள் பெற்றனர். மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தற்போதைய பள்ளி நிர்வாகத்தினர், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.