உள்ளூர் செய்திகள்

சிற்பக்கலையில் முதுகலை படிப்பு

சென்னை: கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையில், இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லுாரியில், இளங்கலையில் மரபு கட்டடக்கலை, வண்ணக்கலை, மரபு சிற்பக்கலை, கற்சிற்பம் உட்பட, பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், இக்கல்லுாரில் நடப்பு கல்வியாண்டு முதல், முதுநிலை மரபு கட்டடக்கலை, மரபு சிற்பக்கலை, மரபு வண்ணக்கலை போன்ற பாடப்பிரிவுகளில், இரண்டாண்டு முதுகலை பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையில், இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், முதுகலை படிப்பில் சேர, https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில், அடுத்த மாதம், 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலை, பண்பாட்டு துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்