ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்துககு உட்பட்ட மானாமதி கிராமத்தில் அரசு மேல்நில்பைபள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகம். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர். இந்நிலையில் சிங்கம்பெருமாள் அரசுப்பள்ளிக்கு இவர் இடம் மாற்றப்பட்டுள்ளார். சண்முகம் தலைமை ஆசிரியராக சேர்ந்த பிறகு மாணவர்கள் கல்வித்தரம் மேம்பட்டிருப்பதால் அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.