உள்ளூர் செய்திகள்

கோட்டயத்தில் உயர்கல்வி மாநாடு

உயர்கல்விக்கான சர்வதேச மாநாடு, டிசம்பர் 8 ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து 30 நிபுணர்கள் அடங்கிய 300 கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறது. "இந்த மாநாட்டின் நோக்கம், கல்வி என்பது அமைதிக்காகவும், சமூக அம்சங்களை உள்ளடக்கிய ஒன்றாகவும், நீடித்த மேம்பாட்டிற்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும்" போன்ற விஷயங்களில் கலந்துரையாடுவதுதான்" என்று மகாத்மா காந்தி பல்கலையின் துணைவேந்தர் ராஜன் குருக்கள் தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டை ஒட்டி, கல்வி சம்பந்தமான கண்காட்சியும் பல்கலை வளாகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்