உள்ளூர் செய்திகள்

மேஜிக் பள்ளிகள் தொடக்கம்

புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் பி.சி. சர்கார்(ஜூனியர்), சென்னை, கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மேஜிக் பள்ளிகளை அமைக்க உள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், "கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மேஜிக் பள்ளிகள் 2011, ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். அதேசமயம் சென்னையில் பள்ளி அமைப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. கோழிக்கோட்டில் அமையும் பள்ளியானது ஆரம்ப நிலை பள்ளியாகும். அங்கே மேஜிக் கலையின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும்" என்றார். சர்கார் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்