உயிரியல் வினாத்தாள் கடினம்
பிளஸ் 2 உயிரியலில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது, "விலங்கியலில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமை. இதில் 10 மதிப்பெண் வினாக்கள் முந்தைய தேர்வுதாளில் இருந்தவை. இதனால் சற்று கடினமாக இருந்தது. புத்தகம், புளூ பிரின்ட் படி கேள்விகள் கேட்கவில்லை. பழைய தேர்வு வினாக்களை படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம். தாவரவியலில் 3 மதிப்பெண் கேள்விகள் எளிமை. விலங்கியலில் 10 மதிப்பெண் வினாக்கள் கடினம். புத்தகம், புளூபிரிண்ட் படி கேள்விகள் கேட்டிருந்தாலும், சற்று ஆழமாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களும் புளூபிரின்ட் படி கேட்கவில்லை. ஆசிரியர் தரப்பில் கூறப்பட்டதாவது, "ஐந்து மதிப்பெண் வினாக்கள் புளூ பிரின்ட் படி இல்லை. கடந்த ஆண்டில் சற்று கடினம். அதோடு ஒப்பிடுகையில் தற்போது எளிமைதான். ஐந்து மதிப்பெண் வினாக்களை நேரடியாக கேட்காமல், மறைமுகமாக கேட்டுள்ளனர். மாணவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. விலங்கியலில் எதிர்பாராத கேள்விகள் சில கேட்கப்பட்டன.