பள்ளி வாகனங்கள் பறிமுதல்:ரூ.1 லட்சம் அபராதம்
நாமக்கல்: நாமக்கல் - துறையூர் சாலையில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற, 3 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காமலும், அனுமதி சீட்டு சரண் செய்தும், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 16 வாகனங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஆட்டோ உள்ளிட்ட, இரண்டு வாகனங்கள் என, மொத்தமாக இந்த சோதனையின் போது, ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.