டிச., 12ல் ரத்து செய்யப்பட்ட தேர்வு வரும் 21ல் நடத்த சி.இ.ஓ., உத்தரவு
சேலம்: மழை காரணமாக, டிச.,12ல் ரத்து செய்யப்பட்ட அரையாண்டு தேர்வை, 21ல் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு டிச., 9 முதல், 23 வரையும், துவக்கப்பள்ளிகளில், ஒன்று முதல், 5 வரையிலான வகுப்புகளுக்கு, டிச., 16 முதல், 23 வரையும் அரையாண்டுதேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி, சேலம் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் டிச., 9ல் தேர்வுகள் தொடங்கின. டிச., 12ல், மழை காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி விடுமுறை அறிவித்தார்.இதையடுத்து அன்று நடைபெற இருந்த தேர்வுகள், டிச., 21ல் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி, டிச., 23க்குள் அனைத்து தேர்வுகளும் முடிக்கப்பட்டு, 24 முதல், ஜன., 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.