’நெட்’ தகுதி; 1380 பேர் ’ஆப்சென்ட்’
மதுரை: மதுரையில் நடந்த நெட் தகுதி தேர்வில் 1380 பேர் பங்கேற்கவில்லை. சி.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட கல்லுாரி மற்றும் பல்கலைகளில் ஆசிரியர்கள் தகுதிக்கான நெட் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் 9200 பேர் விண்ணப்பித்தனர். 14 மையங்களில் தேர்வு நடந்தது. பொது அறிவு, விருப்ப பாடங்கள் என மூன்று தாள்களுக்கு தேர்வர்கள் விடையளித்தனர். தேர்வை டில்லி சி.பி.எஸ்.இ., துணை செயலாளர் ரஜனிசிந்துஜவானி பார்வையிட்டார். மகாத்மா பள்ளி முதல்வர் அம்சபிரியா தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.