உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதம் இருந்த 14 வனக்கல்லூரி மாணவர்கள் மயக்கம்

மேட்டுப்பாளையம்: உண்ணாவிரதத்தின் போது மயக்கமடைந்த வனக் கல்லூரி மாணவர்கள், 14 பேர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 213 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வனச்சரகர் பணிக்கு, 100 சதவீதம் வனவியல் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்; வனவர் பணியில், வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர். பேச்சில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. நேற்று மாலை வரை, 14 மாணவ, மாணவியர் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், கண்ணீர் மல்க, கல்லூரி முன் திரண்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே விட அனுமதிக்காத நிலையில், 50 போலீசார், கல்லூரி முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்