பள்ளிகள் சீரமைப்புக்கு 14 சிறப்பு அதிகாரிகள்
சென்னை: பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஏதுவாக, மழை பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள், 14 பேரை, சிறப்பு அதிகாரிகளாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி நியமித்துள்ளார்.அதிகாரிகள் விபரம்:திருநெல்வேலி: ஸ்ரீதேவி, ஜெயகுமார், சாந்தி, முனுசாமி. துாத்துக்குடி: செல்வராஜ், அமுதவல்லி, ராமசாமி, கோபிதாஸ். கன்னியாகுமரி: பொன்னையா, அய்யணன், ராமகிருஷ்ணன், சுவாமிநாதன். தென்காசி: செல்வக்குமார், ஞானகவுரி.இந்த அதிகாரிகள், இன்று முதல் பணிகளை துவங்கி, பள்ளிகளின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.