உள்ளூர் செய்திகள்

பொறியியல் கலந்தாய்வில் 18,944 பேர் சேர்க்கை பெற்றனர்

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வின் 8வது நாளான வெள்ளிக்கிழமை, 3185 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அதில் 586 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை. 73 மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்று கூறி எந்த பாடத்தையும் தேர்வு செய்யாமல் திரும்பிச் சென்றுவிட்டனர். மீதமுள்ள 2589 மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதற்கான ஆணையையும் பெற்றுக் கொண்டனர். வெள்ளிக்கிழமையும் 18.40 விழுக்காடாக வராதோர் எண்ணிக்கை இருந்தது. பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கி 8 நாட்களில் மொத்தம் 18,944 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர். 22,988 பேர் அழைக்கப்பட்டதில் 3971 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. மொத்தமாக 73 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும் எந்த பாடத்தையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்