ஒரே நேரத்தில் 2 தேர்வுகள் பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம்
சென்னை: காலாண்டு தேர்வு காலத்தில், முதல்வரின் திறனறிவு தேர்வும் நடத்துவதால், பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்ட மாணவர்களுக்கு, வரும், 19ம் தேதி முதல் காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும், 27ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. இந்நிலையில், செப்., 23ல் பிளஸ் 1 மாணவர்களுக்கு, முதல்வரின் திறனறிவு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, பிளஸ் 1 மாணவர்களின் வேதியியல் தேர்வுக்கு மறுநாள் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று முன்னிலை மதிப்பெண் பெறும், 1,000 மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, 10,000 ரூபாய் என, இளநிலை பட்டப் படிப்பு முடிக்கும் வரை, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.காலாண்டு தேர்வு நடக்கும் காலத்திலேயே, திறனறிவு தேர்வும் நடத்துவதால், எந்த தேர்வுக்கு தயாராவது என, பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, கல்வி அதிகாரிகள் ஆலோசித்து, உரிய மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.