எம்.டி.எஸ்., சேர 20க்குள் விண்ணப்பம்
சென்னை: அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான, எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org; www.tn.gov.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.