நீட் தேர்வுக்கு 20 மையங்கள்
மைசூரு: மே 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு மாவட்டத்தில், 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார்.மைசூரில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர், மே 4ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு மாவட்டத்தில் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில், 7,709 மாணவர்கள் தேர்வு எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு ஏஜென்சி மூலம் கூறும் வழிகாட்டுதல்படி, தேர்வு நடத்தப்படும். எந்தவித முறைகேடும் நடக்ககூடாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள், என்று உத்தரவிட்டார்.