உள்ளூர் செய்திகள்

தொழிற்பயிற்சியில் இணைய 23 வரை அவகாசம் நீட்டிப்பு

கோவை: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2023ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கான அவகாசம் வரும் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருவோருக்கு, தொழிற்பயிற்சி நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.700 உதவித்தொகை வழங்கப்படும். புதுமைபெண் திட்டத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்படும்.இலவச லேப்-டாப், சைக்கிள், சீருடை, தையல் கூலி, செருப்பு, பாடப்புத்தகம், வரைபடக்கருவி, 30 கி.மீ., துாரம் வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விபரங்களுக்கு, 98651 28182, 94990 55692, 88381 58132, 94422 39112 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்