உள்ளூர் செய்திகள்

மகாலிங்கம் கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில், 23வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி வரவேற்றார்.கல்லுாரி தலைவர் மாணிக்கம் பேசுகையில், “எதிர்காலம் என்பது தங்கள் பொறுப்புகளை நேர்மை, கடின உழைப்பு மற்றும் பொறுமையுடன் நிறைவேற்றும் நபர்களுக்கே சாதகமாக அமையும். தொடர்ச்சியான உழைப்பும், சிறந்ததை நோக்கிய உறுதிப்பாடும், தனிநபர் முன்னேற்றத்துக்கும், குடும்ப நலனுக்கும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.மக்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன் காரணமாக தமிழகம் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது,” என்றார்.கல்லுாரி தாளாளர் ஹரிஹரசுதன் பேசினார். சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவன இயக்குநரும், மாருதி சுசுகி குருகிராம் நிறுவன முன்னாள் மூத்த செயல் இயக்குநர் ராஜேஷ் உப்பல் பேசினர்.தொடர்ந்து, 909 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், 11 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். 2,121 மாணவர்கள் முதல் வகுப்பு டிஸ்டின்கிேஷன் பெற்றனர்.675 மாணவர்கள் முதல் வகுப்பிலும், 22 மாணவர்கள் இரண்டாம் வகுப்பிலும் வெற்றி பெற்றனர். துணை முதல்வர் செந்தில்குமார், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு டீன் ராமகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்