உள்ளூர் செய்திகள்

பி.எட்., மாணவர் 3 பேர் வருகை பதிவேட்டில் மோசடி? விசாரிக்க சி.இ.ஓ., உத்தரவு

சேலம்: இடைப்பாடி, பூலாம்பட்டி அருகே தனியார் கல்வியியல் கல்லுாரி உள்ளது. அங்குள்ள மாணவர்கள், 80 நாட்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சிக்கு, கடந்த செப்டம்பரில், பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில், பி.எட்., மாணவர், 16 பேருக்கு, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 3 பேர் முறையாக பயிற்சிக்கு வரவில்லை என புகார் எழுந்தது.ஆனால் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி முடியும்போது, ஏற்கனவே அவர்கள் கையெழுத்திட்ட வருகைப்பதிவேட்டை பெற்றுக்கொண்டனர். பின் புதிதாக ஒரு வருகை பதிவேட்டை வழங்கியுள்ளனர். அதில் பயிற்சிக்கு வராத, 3 பேரின் கையெழுத்து இருந்தது. அத்துடன், 13 பேரையும் மீண்டும் புதிதாக, 80 நாட்களுக்கு கையெழுத்திட அறிவுறுத்தியுள்ளனர்.இதுதொடர்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் சென்றது. அதனால் வருகை பதிவேட்டில் கையெழுத்து மோசடி நடந்துள்ளதா என விசாரிக்க, சி.இ.ஓ., கபீர், சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பாவை (இடைநிலை) நியமித்துள்ளார். அவரது விசாரணை முடிவில் உண்மை தெரியவரும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்