உள்ளூர் செய்திகள்

ஈஷா சார்பில் 3 நாட்கள் இலவச யோகா வகுப்பு

சென்னை: ஈஷா யோக மையம் சார்பில், உயிர் நோக்கம் என்ற பெயரில், மூன்று நாள் இலவச யோகா வகுப்பு டிச., 1 முதல் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.தினமும், காலை, 6:00 முதல் 8:00 மணி வரை; காலை 10:00 முதல் நண்பகல் 12:00 மணி வரை; மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை என, மூன்று நேரங்களில் வகுப்பு நடத்தப்படும். இந்த வகுப்பில், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்து பயன் பெறலாம்.யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் இந்த வகுப்பில் கற்றுக் கொடுக்கப்படும். இப்பயிற்சிகளை தினமும் செய்வதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம், மனநலன் மேம்படும்; மன அழுத்தமும் நீங்கும்.இதில் பங்கேற்க, 25ம் தேதிக்குள் முன்பதிவு அவசியம். ஆர்வமுள்ளோர், 73836 73836 என்ற மொபைல் போன் எணணை அழைத்தால், ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதிலுள்ள, லிங்ஐ, கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், isha.co/unom இணைப்பிலும் பதிவு செய்து கொள்ளலாம் என, ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்