சந்திரயான் -3 குழுவில் கம்பிளியம்பட்டி விஞ்ஞானி
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜி. காமேஷ் குரு சந்திரயான்- 3 வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளில் ஒருவர்.ஜி. காமேஷ் குரு கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தவர். பின் திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் 2005--2008 பேட்ச் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி-.டி., யிலிருந்து எம்.எஸ். (நான்-டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) படித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். சந்திரயான்-3 பணியின் ஏவுகணை வாகனம், செயற்கைக்கோள் உந்துவிசை அமைப்புகளில் விஞ்ஞானி, செயற்கைக்கோள் திரவ இன்ஜின் தரக்கட்டுப்பாட்டில் இன்ஜினியராக உள்ளார்.சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர். இவர் சந்திரயான் 2, ஆதித்யா செயற்கைக்கோள் திட்டங்களிலும் பணிபுரிந்து பெரும் பங்கு வகித்துள்ளார்.