உள்ளூர் செய்திகள்

இன்று மார்ச் 3 உலக வனவிலங்கு தினம்

உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர். சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூமி, மனிதர்களுக்கு உதவும் வன விலங்குகள்,தாவரங்களை பாதுகாக்க ஐ.நா., சார்பில் மார்ச் 3ல் உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப் படுகிறது. வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு என்பது இந்தாண்டு மையக்கருத்து. சட்ட விரோதமாக வேட்டையாடப்படுவதுதடுக்கப்பட வேண்டும்.சிங்கம், புலி, மான், யானை போன்றவிலங்குகள், கொக்கு போன்ற பறவைகள், பல வகை பூக்கள்,..பயிர்கள் போன்ற தாவரங்கள், மீன், ஆமை, பவளம் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் என பல்லுயிர் பெருக்கம் உலகிற்கு மிக அவசியம். இவற்றையும் காடுகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்