உள்ளூர் செய்திகள்

மாவட்டந்தோறும் சிறந்த 3 பள்ளிகள் தேர்வு: நவ.14ல் விருது வழங்கல்

ராமநாதபுரம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாவட்டந்தோறும் தலா மூன்று சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நவ.,14 ல் இப்பள்ளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.தொடக்கப்பள்ளி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன், உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2022-2023 ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கு விருது வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 பள்ளிகள் தேர்வுக்குழு அலுவலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மரைக்காயர் பட்டினம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழங்குளம், கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கிடாரம் ஆகியவை சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதே போல 38 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த பள்ளிகளுக்கு நவ., 14ல் சென்னை அண்ணாத்துரை நுாற்றாண்டு நுாலகத்தில் சூழற்கேடயம் வழங்கப்பட உள்ளது.மாநிலக்கணக்காயர், துறை தணிக்கை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது சிறந்த பள்ளிக்கான கேடயம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்