சிறப்பு வகுப்புகள் 3 நாளுக்கு கூடாது
திருப்பூர்: பொதுத்தேர்வு முடிந்த கையோடு, தனியார் பள்ளிகள் பலவற்றில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் இப்போதே துவங்கப்பட்டு விட்டது. கல்வியாண்டு ஜூனில் துவங்கினாலும், கடந்த ஒரு மாதமாக இவர்கள், 2024 - 25ம் ஆண்டுக்கான புத்தகங்களை கொண்டு கல்வி கற்று வருகின்றனர்.இந்நிலையில், இன்று லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று (19ம் தேதி) வரும், 20 மற்றும், 21ம் தேதி மூன்று நாட்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அரசு பள்ளிகள் ஓட்டுச்சாவடி மையங்களாக செயல்பட்டாலும், தனியார் பள்ளிகள் உட்பட, ஓட்டுச்சாடி இல்லாத அனைத்து பள்ளிகளிலும், வரும், 21ம் தேதி வரை பொதுத்தேர்வு சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்தல் நாள், தேர்தலுக்கு மறுநாள் உட்பட, 21ம் தேதி வரை தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.