உள்ளூர் செய்திகள்

பொறியியல் கவுன்சிலிங்: 4 நகரங்களில் நடத்த திட்டம்

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கை, சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2001-2006 ம் ஆண்டு ஆட்சியில், சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில், பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. ஆனால் கடந்த ஆட்சியில், ஒரே இடமாக சென்னை அண்ணா பல்கலையில் மட்டும் நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, மீண்டும் நான்கு மையங்களில் நடத்துவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு நகரங்களில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்