உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்பு 42,957 பேர் விண்ணப்பம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு, 42,957 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 9,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, 2,200 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், 1ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடங்களுக்கு, 42,957 பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும் 19ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 21ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.மருத்துவ படிப்புகளுக்கு, 2022ல், 36,100 பேரும்; 2023ல், 40,199 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்