உள்ளூர் செய்திகள்

நவோதயா 6ம் வகுப்பு தெரிவு நிலை தேர்வு புதுச்சேரியில் 1,562 பேர் எழுதினர்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த நவோதயா வித்யாலயா ஆறாம் வகுப்பு தேர்வினை 1,562 பேர் எழுதினர்.நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 6ம் வகுப்பு சேருவதற்கான தெரிவு நிலை தேர்வு நேற்று காலை 11:00 மணி முதல் 1:30 மணி வரை நடந்தது. பெரிய காலாப்பட்டில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில், ஆறாம் வகுப்பில் 80 சீட்டுகள் உள்ள நிலையில் இந்த இடங்களுக்கும் சேர்த்து புதுச்சேரியில் தெரிவு நிலை தேர்வு நடந்தது.இத்தேர்வு, திரு.வி.க.,அரசு ஆண்கள் உயர் நிலைப் பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனி லைப் பள்ளி, முதலியார் பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேனிலைப் பள்ளி, வில்லியனுார் கண்ணகி அரசு மேனிலைப் பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேனிலைப் பள்ளி, கலிதீர்த்தாள் குப்பம் கருணாநிதி அரசு மேனிலைப் பள்ளி உள்ளிட்ட எட்டு மையங்களில் நடத்தப்பட்டது.மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு நடந்தது. விண்ணப்பித்து இருந்த 1,954 மாணவர்களில் 1,562 பேர் எழுதினர். பல்வேறு காரணங்களால் 392 பேர் ஆப்சென்டாகி இருந்தனர். தேர்வு மையத்தினை முதன்மை கல்வி அதிகாரி மோகன் ஆய்வு செய்தார்.விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டில்லி அனுப்பப்பட்டது. தேர்வு முடிவு, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்