அண்ணா பல்கலையில் 656 பொறியியல் இடங்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. சென்னை அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. தற்போது மற்ற இடங்களில் உள்ள அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் உள்ளன. தற்போதுள்ள 656 இடங்களில் இன்று நடைபெறும் கலந்தாய்வில் ஒரு சில இடங்கள் நிரம்பிவிடும். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 46,324 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக ஆகஸ்ட் 11ம் தேதி கலந்தாய்விற்கு 46,980 இடங்கள் காலியாக உள்ளன. இன்றுடன் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி முதல், துணைக் கலந்தாய்வு துவங்குகிறது. மேலும், 14ம் தேதி எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வும், 16 மற்றும் 17ம் தேதிகளில் தொழிற் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.