உள்ளூர் செய்திகள்

ஒரே பள்ளியில் 78 மாணவர்கள்; 5 ஆசிரியர்கள் காய்ச்சலால் பாதிப்பு

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், அங்கநாதவலசை அரசு உயர்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், 78 மாணவ - மாணவியர், ஐந்து ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை எடுத்தனர்.இதையடுத்து, அப்பகுதியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறப்பு முகாம் நடத்தினர். இதில், பலருக்கு காய்ச்சல், இருமல், சளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பள்ளி சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில், மருந்து தெளித்து கொசுக்களை அழிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர். சிறப்பு மருத்துவ முகாம் வாயிலாக, அப்பகுதியில் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்