உள்ளூர் செய்திகள்

குரூப்- 8 தேர்வு: கிருஷ்ணகிரியில் 50 % பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானய குரூப்- 8க்கான தேர்வில் 243 பேர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஹிந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் நிலை 4க்கான குரூப் 8க்கான தேர்வு நேற்று (நவ., 17) நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வில் கலந்து கொள்ள 486 பேர் விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ராஜேஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வில் 243 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 243 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வில் ஆஜராகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்