உள்ளூர் செய்திகள்

ஓவியப் போட்டியில் 860 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

வேப்பேரி: கால்நடை துயர் தடுப்பு கழகம் சார்பில் நடந்த, ஓவிய போட்டியில் 860 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை வேப்பேரியில் இயங்கி வரும், கால்நடை துயர் தடுப்பு கழகம் சார்பில், விலங்குகளிடம் கருணை காட்டுங்கள் என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது. காலை, 10 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில், சென்னையில் உள்ள 45 பள்ளிகளில் இருந்து, 860க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மாற்றுத் திறனாளிகள். அவர்கள் அனைவரும், பல்வேறு விலங்குகளை பலவிதமாக படம் வரைந்து, பார்வையாளர்களை அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்