பி.எட்., சேர்க்கை: 9ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
சென்னை: "பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை, 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், பி.எட்., சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் 16ம் தேதி, மாலை, 3:00 மணி வரை, வினியோகிக்கப்படும். வரும், 15ம் தேதி, விண்ணப்ப வினியோகம் இருக்காது. மற்றபடி, சனி, ஞாயிறு உட்பட, அனைத்து நாட்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட, ஏழு அரசு கல்லூரிகள், ஆறு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை - 2013, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்: 1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை, சென்னை.2. வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி, சென்னை.3. அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்.4. அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு.5. அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை.6. அரசு கல்வியியல் கல்லூரி, கோவை.7. அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர்8. லட்சுமி கல்வியியல் கல்லூரி, காந்திகிராம், திண்டுக்கல் மாவட்டம்.9. ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி, பேர்லாண்ட்ஸ், சேலம்.10. தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, மதுரை.11. வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி.12. செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை.13. என்.வி.கே.எஸ்.டி., கல்வியியல் கல்லூரி, ஆற்றூர், திருவட்டார்.