உள்ளூர் செய்திகள்

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம்: வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள், அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்தோர், பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்வி, அதற்கு சமமான கல்வித்தகுதி, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளுக்குரிய சான்றிதழ்களை பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு, அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், வரும் பிப்., 29ம் தேதிக்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்