உள்ளூர் செய்திகள்

வேலை ரெடி!

தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். எல்லோருக்கும், &'வேலை கிடைப்பதில்லை&' என்ற நிலை உள்ளது.தொழில் நிறுவனங்கள் கூறுவதெல்லாம், &'வேலை இருக்கிறது; படிப்பு இருந்தும் உங்களுக்கு திறமை இல்லை&' என்பதுதான்.சட்டை அழுக்கு இழுக்கல்ல...உழைப்பு!இருப்பினும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் பலரின் எதிர்பார்ப்பு, சட்டை அழுக்குப்படாமல் வேலை செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. பாலிடெக்னிக், ஐடிஐ படித்த மாணவர்கள், படித்து முடிக்கும் முன்பே வேலை தயாராகி விடுகிறது. ஏனென்றால், இவர்கள் உழைக்க தயாராக இருப்பவர்கள்.சிவில் படித்த மாணவர்களுக்கு கட்டுமான நிறுவனங்களின் சூப்பர்வைசர் வேலைகள் இருக்கின்றன. மெக்கானிக்கல் படித்த மாணவர்களுக்கு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள், லேத்களில் பணிகள் உள்ளன. எலக்ட்ரிக்கல் படித்திருந்தால் எலக்ட்ரீசியன் பணியிடங்கள் உள்ளன. இவர்களுக்கு சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும், ஒயிட்காலர் வேலைக்கு காத்திருந்து வேலைக்கு ஏறும் இன்ஜினியரிங் மாணவர்களை, சில ஆண்டுகளில் முந்தி விடுவர்.எக்கச்சக்க வேலை!10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.ஆபீஸ் பாய், ெஹல்பர்கள், டூவீலர் கிளீனிங் உள்ளிட்ட பல வேலைகள் உள்ளன. தேவை, சுறுசுறுப்பும், சொல்வதை புரிந்து கொண்டு, சரியாக செய்ய தெரிந்திருந்தால் போதுமானது.ஆபீஸ்களில் வேலை!கோவை நகரில் உள்ள தொழில் நிறுவனங்களில் அக்கவுண்டன்ட், ஆபீஸ் பாய், ெஹல்பர், பிட்டர்கள், வெல்டர்கள், எலக்ட்ரீசியன், சூபர்வைசர், லோடு இறக்கி ஏற்றுவோர் உள்ளிட்ட பல தரைமட்ட பணிகளுக்கு, தேவைகள் அதிகரித்துள்ளன. லேத்துக்களை இயக்கவும், கட்டுமான பணியில் பெயின்ட் செய்வோருக்கும், பிளம்பர்களுக்கும், எலக்ட்ரீசியன்களுக்குமான தேவையும் உயர்ந்துள்ளது. தேவைக்கான போர்டுகள் பல இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன. திறமைசாலிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒயிட் காலர் வேலைதான் வேண்டும் என்பவர்கள், காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்பதுதான், இப்போதைய நிலை.வாங்க... வேலை தர்றோம்!கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், &'&'கோவை தொழில் நிறுவனங்களில், பிட்டர், ெஹல்பர், அக்கவுண்டன்ட் தேவைகள் உள்ளன. பவுண்டரி உள்ளிட்ட கனமான பொருட்களை கையாளவும், சிறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவும் ஆட்கள் தேவை கூடி வருகிறது. இன்ஜினியரிங் படித்தவர்களை விட, தொழில்கல்வி படித்தவர்கள், 10ம் வகுப்பு, பிளஸ்2 படித்திருந்தால் போதும். கோவை மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு எளிதாக வேலை பெற முடியும்,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்