மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
இதன் தொடர்ச்சியாக உதவும் நல்வாழ்வு தொழில் நுட்பங்களுக்கான தேசிய மையம் தரமணியில் உள்ள ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில் நேற்று துவங்கப்பட்டது. ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, இம்மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது:மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரம் மேம்பட அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஐ.ஐ.டி., முன்னோடியாக விளங்குகிறது.வீல்சேர், செயற்கை கால், பேட்டரி பைக் போன்ற உபகரணங்களில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். இதை பொது இடங்களில் பயன்படுத்துவது சிரமமாக உள்ளதால் இம்மையத்தில் செயல்விளக்க பயிற்சியும் வழங்குகிறோம்.ஒவ்வொருத்தருக்கும் உடல் சவால் வேறுபடும். அதற்கு ஏற்ப, உபகரணங்களை வடிவமைக்கிறோம். ஆராய்ச்சியை, அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்தி வருகிறோம். வீல்சேர் உள்ளிட்ட உபகரணங்கள், மார்க்கெட் விலையை விட குறைவாக இருக்கும். சி.எஸ்.ஆர்., நிதியில், ஏழை மக்களுக்கு உதவவும் தயாராக உள்ளோம். இதன் வாயிலாக, எல்லா வகையான மாற்றுத்திறனாளிகளும், மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.ஐ.ஐ.டி., பேராசிரியரும், டி.டி.கே., மையத்தின் தலைவருமான சுஜாதா சீனிவாசன் பேசியதாவது:ஆராய்ச்சியில், இங்கு கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள், சமூகத்தில் சக மனிதர்களை போல், மாற்றுத்திறனாளிகளால் வாழ முடியும் என்பதை உணர்த்தும். அதற்கான பயிற்சியும் வழங்குகிறோம். பழுதடைந்த சாலை, வேகத்தடை, மணல் போன்றவற்றில், வீல்சேர் பயன்படுத்துவது தொடர்பாக செயல்விளக்க பயிற்சி அளிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலா, டச்ப்ரீடம் அமைப்பின் நிர்வாகி சஞ்ஜீப்கல்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.