உள்ளூர் செய்திகள்

இன்ஜி., கவுன்சிலிங்

சென்னை: அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் சுற்றுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 5,267 பேர் உள்பட, 40,741 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்த இரண்டு சுற்றுகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 6,222 பேருக்கும்; மற்ற பிரிவுகளில், 50,615 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் சுற்றுக்கு நாளை மாலை, 5:00 மணி வரை முன் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்