துணைவேந்தர் நியமனம்
லக்னோ: கோரக்பூரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் பூனம் டாண்டன் நியமனம்.உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் பூனம் டாண்டனை நியமித்து உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார். இவர், மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார். இங்கு, துணைவேந்தராக இருக்கும் ராஜேஷ் சிங்கின் பதவிக்காலம் செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.அதேபோல, அலகாபாத் பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் வந்தனா சிங், ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலை துணைவேந்தராக பிரயாக்ராஜ் ஆகியோரையும் நியமித்து கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார்.