ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு
மதுரை: மதுரை புதுார் ஐ.டி.ஐ.,யில் பயிற்சியை நிறைவு செய்து அகில இந்திய தொழிற்தேர்வில் வெற்றி பெற்ற 555 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் நவாஸ் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்கள், பென்னர் நிர்வாக மூத்த அலுவலர் சுப்பையா, பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். பணியமர்த்தும் அலுவலர் வாசன் பாபு தொகுத்து வழங்கினார்.