கவுன்சிலிங் ஒத்திவைப்பு
கோவை: உடற்கல்வி இயக்குனர் நிலை, 1, உடற்கல்வி இயக்குனர் நிலை, 2, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு நவ., மாதம் வெளியிடப்பட்டது. கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை பதிவேற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து, ஒப்புதல் அளித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுடன் முன்னுரிமை, காலிப்பணியிட விபரம் வெளியிடப்பட இருந்த நிலையில், கவுன்சிலிங் நடக்கும் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 13, 15ம் தேதி பட்டியல் வெளியிடப்படுகிறது.மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் கவுன்சிலிங், 14, 15ம் தேதிக்கு பதிலாக, டிச. 18 மற்றும், 19ம் தேதி நடக்கும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வரும், 18ம் தேதிக்கு பதிலாக, 20ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.