பயிற்சி பட்டறை
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் இளைஞர்களுக்கான கிராம கைத்தொழில் பயிற்சிப் பட்டறை நடந்தது. கலிபோர்னியா பல்கலை பொது நிர்வாகத்துறை பேராசிரியர் மவுரைஸ் பிஷிப் தொடங்கி வைத்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். காப்பாட்சியர் நடராஜன் ஒருங்கிணைத்தார். காய்கறி, பழம், பூக்களின் கழிவுகளில் இருந்து பயோ என்சைம் திரவம் தயாரித்தல், மதிப்புக் கூட்டப்பட்ட மூலிகை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.