பிரேரனா துவக்கம்
மதிப்புமிக்க கல்வியை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை - 2020ன் படி, &'பிரேரனா’ எனும் தனித்துவமான பயிற்சி திட்டத்தை, இந்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை துவக்கியுள்ளது.ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான இந்த ஒரு வார கால முழுநேர பயிற்சி திட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். யோகா மற்றும் தியானம் பயிற்சிகளோடு, பண்டைய மற்றும் பாரம்பரியமிக்க புராதன இடங்களுக்கு செல்லுதல், உத்வேகமிக்க பல்வேறு செயல்களில் ஈடுபடுதல், நவீன தொழில்நுட்பங்களை அறிதல் என ஏராளமான அம்சங்களை &'பிரேரனா’ வழங்குகிறது.