உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: அரசு, உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டபடிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.கல்லுாரி செல்லும் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய முகவரியில் மாணவர்கள் நுழைவில் சென்று ஆதார் எண் அளித்து இ-கே.ஒய்.சி., செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் பிப்.,1 முதல் செயல்படுகிறது. பதிவு செய்த விண்ணப்பங்களை பிப்.,29க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.