உள்ளூர் செய்திகள்

புத்தக கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் வளர்ச்சி இயக்கம், மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். நண்பர்கள் ரோட்டரி சங்க தலைவர் முருகதாஸ், முன்னாள் தலைவர் அங்குராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.விழாவில் பேராசிரியர் ரவி, பேராசிரியை கலா, புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர் வளர்ச்சி இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். செயலர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார். இக்கண்காட்சி பிப்.27 வரை ஆண்டாள் கோயில் அருகே பிச்சு அய்யங்கார் மண்டபத்தில் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்