டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு துறைகளில், குரூப் 2 நிலை பதவிகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், சான்றிதழ்களை ஏற்கனவே ஆன்லைனில் பதிவேற்றியவர்கள், சில ஆவணங்களை பதிவேற்றாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, விடுபட்ட ஆவணங்களை, பிப்.,20ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தேர்வர்களுக்கான பக்கத்தில் பதிவேற்றலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.