உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: 90 சதவீதம் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பாதிக்க கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 ஐ ரத்து செய்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். டிட்டோ ஜாக் பேரமைப்பின் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளுக்கான அரசாணைகளை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு டிட்டோ ஜாக் சார்பில் முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ், மாவட்ட செயலாளர் தேவசிகாமணி,ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வில்சன் சகாயராஜ்,உயர் மட்ட குழு உறுப்பினர் கணேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்