சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 23ம் தேதி நடக்க உள்ளது.கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், செயல் அலுவலர், கூட்டுறவுத்துறை, பண்டகக்காப்பாளர் ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்க்கும் பணி வரும் 23ம் தேதி சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. சரிபார்ப்புக்கான நாள், நேரம், பிற விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.