சி.ஏ., எளிது!
நம் நாட்டில் 40 லட்சம் சி.ஏ., எனும் 'சார்ட்டர்டு அக்கவுண்டண்டு'கள் தேவைப்படும் நிலையில் தற்போது 4 லட்சம் சி.ஏ.,க்களே உள்ளனர். அரசு, தனியார், தொழில் நிறுவனங்களில் மட்டுமின்றி சுய வேலைவாய்ப்புகளும் நிறைந்துள்ளதால், அதிகமானோர் சி.ஏ., படிப்பில் சேர்கை பெற வேண்டும். குறிப்பாக, அதிகளவிலான மாணவிகள் இப்படிப்பில் சேர்க்கை பெற வேண்டும் என்பது எனது விருப்பம்!கட்டுக்கதைகள்ஐ.சி.ஏ.ஐ., எனும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தால் நடத்தப்படும் பட்டயக் கணக்கியல் - சி.ஏ., தேர்வில் நிதி, தணிக்கை, வரிவிதிப்பு மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பள்ளி பொதுத்தேர்வுகளில் சாதரணமாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் 6 முதல் 8 பாடப் பிரிகளை ஒரே காலகட்டத்தில் படித்து தேர்வு எழுதுகின்றனர். ஆனால், சி.ஏ., தேர்வில் ஒவ்வொரு 'குரூப்'பிலும் அதிகபட்சம் நான்கு பாடங்கள் தான் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்தையும் ஆழமாகவும், திட்டமிட்டும் படித்தால் சி.ஏ., தேர்வில் வெற்றி பெறுவது எளிது. ஆகவே, சி.ஏ., தேர்வு கடினம் என்பது கட்டுக்கதை! பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்க்கை பெறுவது கடினம். ஆனால் பட்டம் பெறுவது ஓரளவு எளிது. ஆனால், சி.ஏ., தேர்வில் சேர்க்கை பெறுவது எளிது. தேர்வில் வெற்றி பெற்று சி.ஏ., தகுதியை பெறுவது கடினம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால், அவை உண்மை இல்லை. அதேபோல், வணிகவியல் மாணவர்கள் மட்டுமே சி.ஏ., தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதும் தவறான கருத்து. அறிவியல் பின்புலத்தை கொண்ட மாணவர்களுக்கு அனலெட்டிக்கல், லாஜிக்கல் எபிலிட்டி அதிகம் உள்ளதால் அவர்களால் இத்தேர்வை எளிதாக அணுக முடியும். துவக்கத்தில் அவர்கள் அடிப்படைகளை நன்கு புரிந்துகொண்டால் போதும். தயாராகும் முறை நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில், சி.ஏ., படிப்பிற்கான வழிமுறைகள், பாடங்கள், முந்தைய தேர்வு வினாக்கள் மற்றும் பதில்கள் என அனைத்துவிதமான வளங்களும் எளிதாக கிடைக்கின்றன. ஆன்லைனில் வாயிலாக இலவசமாகவும் பயிற்சி அளிக்கிறோம். தனியார் பயிற்சி மையங்களில் பணம் செலுத்தி தான் பயிற்சி பெற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நாட்டின் எந்த சிறு கிராமத்தில் இருந்துகொண்டும் சி.ஏ., தேர்விற்கு எந்த கட்டணமும் இன்றி பயிற்சி பெற முடியும். அவை மட்டுமில்லாமல், எங்கள் எஸ்.ஐ.ஆர்.சி., கல்வி மையத்திலேயே மிக மிக குறைவான கட்டணத்தில் நேரடியாகவும் பயிற்சி அளிக்கிறோம். மாதிரி தேர்வுகள் வாயிலாக தேர்வை பயத்தை களைகிறோம். தேர்வுக்கு முறையாக பயிற்சி மேற்கொள்வதுடன், தேர்வு நாளில் அந்த 3 மணிநேரத்தில் மிகவும் கவனமாக தேர்வு எழுதுவதும் அவசியம். வினாத்தாளை நன்கு புரிந்துகொண்டு பிறகு சரியான பதிலை அளிக்க வேண்டும். நேர மேலாண்மையும் முக்கியம். தொடர் முயற்சி, பயிற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் முதல் முறையிலேயே சி.ஏ., தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும் விரிவான தகவல்களுக்கு https://www.icai.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.-ஏ.பி. கீதா, தலைவர், எஸ்.ஐ.ஆர்.சி.,- ஐ.சி.ஏ.ஐ.,geethaab@yahoo.co.in9176013747