உள்ளூர் செய்திகள்

தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்த தண்ணாயிர மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தர விட்டார்.இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் தலைமையாசிரியர் தண்ணாயிரமூர்த்தி, அடிக்கடி பேப்பர், பேனா வாங்க பணம் பெறுவது உட்பட பல்வேறு புகார்கள் எழுந்ததால் செப்., 13ல் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இப்பிரச்சனை தொடர்பாக தலைமையாசிரியர், முறையூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இந்நிலையில் பெற்றோர் போராட்டம் குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் ஆசிரியர், மாணவர்களிடம் நேரடி விசாரணை செய்தார். இந்த விசாரணைக்கு பின், தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்